ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாராகி வருவதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி முன்னணி தமிழ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
பலவீனமாக உள்ள எதிர்கட்சி
எதிர்கட்சி பலவீனமாக உள்ளதால், தற்போதைய அந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்கு செல்வதற்கும், அதனூடாக ஸ்திரமான ஆட்சியை நடத்துவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தேசித்துள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி ரணில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களுடன் கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடி ஜனாதிபதி தேர்தல் ஒன்று வருமாயின் ரணில் விக்ரமசிங்க வேட்பாளராக நிறுத்தி, அவரை வெற்றிபெறச் செய்ய ஒத்துழைப்பை வழங்குவதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளூரத் தீர்மானித்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.