ஆர்.எஸ்.எஸ். பேரணி ஒத்திவைப்பு: அடுத்த கட்ட திட்டம் என்ன?

ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தொடர்ந்த 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளை விதித்து அணிவகுப்புக்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணையில் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

*கோவை, பொள்ளாச்சி, மேட்டுபாளையம், பல்லடம், நாகர்கோவில், அருமனை ஆகிய ஆறு இடங்கள் தவிர, தமிழகம் முழுவதும் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு மற்றும் கூட்டத்தை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் நடத்த அனுமதியளிக்கப்படுகிறது.

*நிகழ்வின் போது, பங்கேற்பாளர்கள் தங்கள் சொந்த வாகனங்களில், பொதுமக்களுக்கோ, போக்குவரத்துக்கோ இடையூறு இல்லாமல் செல்ல வேண்டும்

*நிகழ்ச்சியின் போது பாடல்கள் பாடவோ, தனிப்பட்ட நபர்கள், மதம், ஜாதி குறித்து தவறாக பேசவோ கூடாது.

*தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் குறித்து பேசவோ, கருத்து தெரிவிக்கவோ கூடாது

*இந்திய ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படக் கூடாது.

*லத்தி, கம்பு போன்ற ஆயுதங்கள் எடுத்துச் செல்லக் கூடாது.

*நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, முதலுதவி, ஆம்புலன்ஸ், கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.

*குழல் ஒலிப்பெருக்கி பயன்படுத்தக் கூடாது.

*பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் அதற்கான இழப்பீட்டை செலுத்துவதாக உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

*இந்த நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவிதிருந்தார்.

இரண்டு நாள்களாக சென்னை தாம்பரத்தில் உள்ள ஆர்.எஸ்.எஸ். காரியாலயத்தில் இது தொடர்பாக ஆலோசனை நடைபெற்ற நிலையில் நேற்று மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது. எனவே நாளை (நவம்பர் 6ஆம் தேதி) 44 இடங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். பேரணியை ஒத்திவைப்பதாக அந்த அமைப்பு அதன் தொண்டர்களுக்கு தெரிவித்துள்ளது. சமூகவலைதளங்களில் பேரணி தொடர்பாக கருத்து தெரிவிக்க வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம், உயர் நீதிமன்றம் பிறப்பித்த நிபந்தனைகளை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாமா என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பில் விரைவில் வெளியாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.