“ஆளுநரை மாற்ற கட்சிகள் கையெழுத்து வாங்குவது ஜனநாயகத்துக்கு எதிரானது'' – ஆளுநர் தமிழிசை காட்டம்

புதுவை ஆளுநர் மாளிகையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை, “மக்கள் சந்திப்பின் போது மாற்றுத்தினாளி பெண் ஒருவர் தனக்கு ஒரு வேலையும், மூன்று சக்கர வாகனமும் வேண்டும் எனக் கேட்டார். அதன்படி வாகனம் வழங்கப்பட்டிருக்கிறது. அடுத்த மக்கள் சந்திப்பில் மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனம் ஏற்பாடு செய்து தரப்படும். இதுதான் மக்கள் சந்திப்பின் பலன்.

மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கிய தமிழிசை.

‘ஏன் மக்களைச் சந்திக்கிறீர்கள்? உங்களுக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது? தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் மக்களை சந்திக்க வேண்டும்’ என கூறுபவர்களுக்கு இந்த செயல்தான் எனது பதில். இதுபோல மக்களை சந்திக்கும் போது அவர்களது சிறிய சிறிய தேவைகளை நமது நோக்கத்தினால், முயற்சியினால் ஓரளவு சரிசெய்ய செய்ய முடியும். எங்களால் உடனே சரி செய்துவிடக் கூடிய இன்னும் பல கோரிக்கைகளை சரி செய்திருக்கிறோம். ஜிப்மரில் கேட்ட உதவியை செய்திருக்கிறோம். மக்கள் சந்திப்பை அரசியல் ஆக்காமல் அவசியத்திற்காக, நல்ல மனது படைத்தவர்களால் செய்யப்படுகிறது என்பதை முதலில் அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும். நல்லது யார் செய்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது தொடரும்..!

மக்கள் சந்திப்பு அரசியல் கிடையாது, அது அவசியம் என்பதை நான் பதிவு செய்கிறேன். தமிழக ஆளுநரை மாற்றம் செய்ய அரசியல் கட்சிகள் கையெழுத்து வாங்குவது ஜனநாயகத்துக்கு எதிரானது. மழை வெள்ளத்தால், மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்று அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. முதலமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. எனவே, புதுவை அனைத்து விதத்திலும் பாதுகாப்பாக இருக்கும்.

ஆளுநர் ஆர்.என்.ரவி

பொதுமக்கள் மழை காலங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாந்தி போன்ற அறிகுறிகள் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு வரவேண்டும். விஷப் பூச்சிகள் அதிகம் வரும் என்பதால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குழந்தைகளை கையாளும் போது இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாம் எச்சரிக்கையாக இருந்தால், இந்த மழைநாட்களில் வரும் பாதிப்புகளை நம்மால் தடுக்க முடியும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.