முப்பை நீதிமன்றத்தில், சிறை கைதி கொசு வலை கேட்ட கோரிக்கை மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மும்பையின் பிரபல கேங்ஸ்டரான தாவூத் இப்ராகிம் கூட்டாளியான இஜாஸ் லக்டவாலா கைது செய்யப்பட்டு கடந்து இரண்டு வருடமாக தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பல குற்ற நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளதால் பல முயற்சிகள் எடுத்தும், இவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்நிலையில் தலோஜா சிறையில் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் கொசு வலை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என மாவட்ட செஷ்ன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிமன்றம் விசாரித்த போது, ‘’ தலோஜா சிறையில் கொசு தொல்லை அதிகமாக இருப்பதாகவும். இதனால் பல நோய்கள் பரவுவதாகவும். இதனால் தூங்க முடியாமல் பல சிமரங்களுக்கு ஆளாக்கப்படுவதால் கொசு வலை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தார்.
மேலும் 2020ல் தான் நீதிமன்ற காவலில் இருந்தப்போது கொசு வலை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டத்தை சுட்டிக்காட்டினார். அத்துடன், சிறையில் கடித்த கொசுக்களை ஒரு டப்பாவில் போட்டு ,ஆதாரமாக நீதிபதியிடம் சமர்பித்தார். இஜாஸின் இந்த செயலை அங்கிருந்தவர்கள் ஒரு சில நிமிடங்கள் ஆச்சரியத்திலும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இஜாஸ் லக்டவாலா போலவே தலோஜா சிறையில் உள்ள பல கைதிகள் கொசு வலை கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இஜாசின் பாதுக்காப்பு காரணமாக கொசு வலையை சிறையில் பயன்படுத்த கூடாது என்ற சிறை அதிகாரிக்களின் கருத்தை கவனத்தில் எடுத்துகொண்டு, மனுவில் கூறப்பட்ட கோரிக்கையை மறுத்துவிட்டார். கொசு தொல்லையை கட்டுப்படுத்த சிறை துறைக்கு உத்தரவிட்டார். மேலும் கொசு வலைக்கு பதிலாக கொசு வர்த்தி, ஓடோமோஸ் போன்ற கொசு விரட்டி கிரீம்களை பயன்படுத்த அனுமதி கொடுத்துள்ளார்.
இதையும் படியுங்கள் – ட்விட்டரில் நடக்கும் ஆட்குறைப்புக்கு இதுதான் காரணம் ! … எலான் மஸ்க் விளக்கம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM