சென்னை: சம்பா, தாளடி, பிசானப் பருவ நெற்பயிரை நவ.15-க்குள் காப்பீடு செய்துகொள்ள விவசாயிகளுக்கு உழவர் நலத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட 27 மாவட்ட விவசாயிகள் நெற்பயிரை நவம்பர் 15-க்குள் காப்பீடு செய்ய வேண்டும். கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், நெல்லை, தென்காசி மாவட்ட விவசாயிகளுக்கு டிசம்பர் 15ம் தேதி கடைசி நாள் ஆகும். 2-ம் போக நெல் நடவு சற்று தாமதமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளதால் 6 மாவட்ட விவசாயிகளுக்கு டிசம்பர் 15ம் தேதி கடைசி நாளாக அறிவித்துள்ளனர்.