கோல்கட்டா: பணமோசடி வழக்கில் மேற்கு வங்கம் ஜார்க்கண்ட் மாநிலங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
ராணுவத்துக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்க பணமோசடி செய்தது தொடர்பாக தொழிலதிபர் அமித் அகர்வால் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் அகர்வாலுக்கு தொடர்புடைய மேற்கு வங்கம் ஜார்க்கண்ட் மாநிலங்களில் உள்ள இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். ஆனால் ஜார்க்கண்டில் மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தவே மத்திய அரசு அமலாக்கத் துறையை பயன்படுத்தி சோதனைகளை நடத்துகிறது என ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கருத்து தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement