கிம் ஜாங் உன்னிற்கு அதுவே இறுதி..நெருங்கும் அணு ஆயுத தாக்குதல்: அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை


புதிய வகை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தோல்வியில் முடிந்து இருக்கலாம். 

எந்தவொரு அணு ஆயுத தாக்குதலும் கிம் ஜாங் உன்னின் இறுதி முடிவாகும்.

வடகொரியாவின் அணு ஆயுத தாக்குதல் கிம் ஜாங் உன்னின் இறுதியாக இருக்கும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூட்டு ராணுவ பயிற்சியை கண்டிக்கும் வகையில், வட கொரியா இந்த வாரம் ஜப்பான் மற்றும் தென் கொரிய கடல் பிராந்தியத்தில் தொடர் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.

கிம் ஜாங் உன்னிற்கு அதுவே இறுதி..நெருங்கும் அணு ஆயுத தாக்குதல்: அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை | Us Warns Nuclear Strike Would End Of North KoreaReuters

ஜப்பான் கடல் பகுதியில் ஏவப்பட்ட ஏவுகணை தாக்குதலுக்கு பயந்து, ஒரு கட்டத்தில் ஜப்பான் மக்கள் தங்கள் வீடு மற்றும் மற்றும் நிலத்தடி பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

வடகொரியாவின் இந்த ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், தென் கொரியாவும் தங்களது சொந்த ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது.

மேலும் நவம்பர் 3ம் திகதி வியாழனன்று வடகொரியா சந்தேகத்திற்குரிய புதிய வகை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவியது, ஆனால் அது தோல்வியில் முடிந்து இருக்கலாம் என தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

கிம் ஜாங் உன்னிற்கு அதுவே இறுதி..நெருங்கும் அணு ஆயுத தாக்குதல்: அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை | Us Warns Nuclear Strike Would End Of North KoreaAFP via Getty Image

இந்த நிலையில், வட கொரியாவின் எந்தவொரு அணு ஆயுத தாக்குதலும், கிம் ஜாங் உன் ஆட்சியின் இறுதி முடிவாக இருக்கும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

கூடுதல் செய்திகளுக்கு: ஒற்றை நாட்டிற்கு எதிராக…ஒன்றிணைந்த உலகின் முக்கிய மூன்று நாடுகள்: தொடங்கியது பயிற்சி

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் நடத்தப்படும் அணு ஆயுத தாக்குதல் அல்லது மூலோபாயமற்ற அணு ஆயுத தாக்குதல்கள் உட்பட எந்தவொரு தாக்குதலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் அதுவே கிம் ஜாங் உன் ஆட்சியின் முடிவு என அமெரிக்க பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின், தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர் லீ ஜாங் சுப்பிடம் சந்திப்பில் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கிம் ஜாங் உன்னிற்கு அதுவே இறுதி..நெருங்கும் அணு ஆயுத தாக்குதல்: அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை | Us Warns Nuclear Strike Would End Of North KoreaAFP via Getty Image



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.