உத்திரமேரூர்: சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் உத்திரமேரூர் பகுதியில் விவசாய பணிகள் ஜரூராக தொடங்கியுள்ளது. உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக பருவ மழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிதுள்ளது. குறிப்பாக உத்திரமேரூர் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏரியின் மொத்த ெகாள்ளளவில் பாதியளவு நிரம்பியுள்ளது. தொடர்ந்து, பருவமழை தீவிரமடையும் நிலையில் ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கும். அதனால் விரைவில் ஏரி நிரம்பும் என்று விவசாயிகள் நம்பிக்கையில் உள்ளனர்.
ஏனென்றால் இந்த ஏரியை நம்பி சுமார் 5000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். தண்ணீர் தட்டுப்பாடு இருந்தால் 2, 3 போகம் விளைச்சல் நடக்கும். அதனால் இந்த பருவமழையை நம்பி விவசாயிகள் தங்களது விவசாய பணி தொடங்கியுள்ளனர். நிலங்களில் ஏர்உழுது நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் பச்சை பசேலன்று காட்சியளிக்கிறது. முருக்கேரி கிராமம் மட்டுமின்றி பல இடங்களில் நாற்று நடும் பணி ஜரூராக நடந்துள்ளது. அவற்றில் உள்ள கதிர்களை உண்பதற்காக கொக்குகள், நாரைகள் வட்டமடித்து வருகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘பருவமழையை நம்பி நாற்று நடும் பணிகளை தொடங்கியுள்ளோம். உத்திரமேரூர் மற்றும் சுற்று வட்டார சில தினங்களாக பெய்த மழையால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. விவசாய பணிகளை தொடங்கியுள்ளோம். தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும்பட்சத்தில் விவசாயம் செழிக்கும். விளைச்சல் அமோகமாக இருக்கும்’ என்றனர்.