‘Axess Film Factory’ டில்லி பாபு, தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சக்திவேல் இயக்கத்தில் பரத்-வாணி போஜன் நடித்துள்ள திரைப்படம் ‘மிரள்’. இப்படத்தில் பரத், வாணி போஜன் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மற்ற நடிகர்கள் மீர் கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி, அர்ஜை, நரேன் பாலாஜி, மாஸ்டர் அங்கித், மாஸ்டர் சாந்தனு மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். புதுமையான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. படத்தின் வெளியீட்டையொட்டி படக்குழு நேற்று (நவ. 4) பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர்.
இவ்விழாவினில், நடிகை வாணி போஜன் பேசியதாவது,”இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் மிகப்பெரிய நன்றியை கூறிக்கொள்கிறேன். இந்த படம் மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. ஒட்டுமொத்த படக்குழுவும் முழு அர்பணிப்பை கொடுத்து, இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். இணைந்து நடிப்பதற்கு பரத் மிகச்சிறந்த நடிகர். அவருடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது.
‘ஒரு பாடலுக்கு 5 மாதங்கள்…’
விநியோகஸ்தர் சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன்,”Axess Film Factory தொடர்ந்து சிறந்த படங்களை கொடுத்து கொண்டிருக்கும் ஒரு நிறுவனம். Axess Film Factory ஒரு படத்திற்கு தரும் அர்ப்பணிப்பு பிரமிப்பானது. ‘பேச்சுலர்’ படத்தின் ஒரு பாடலுக்காக 5 மாதங்கள் எடுத்து கொண்டனர்.
இந்த படத்தை 20 நாட்களில் முடித்துள்ளனர். நான் படம் பார்த்து விட்டேன். படம் 20 நாளில் எடுத்தது போல் இருக்காது. மிகப்பெரிய பிரமிப்பை தரும் படைபபாக உள்ளது. தமிழ் சினிமாவுக்கு புதுமையான ஒரு ஹாரர் படத்தை தந்துள்ளார்கள். படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும்” என்றார்.
‘பரத் நல்ல உழைப்பாளி’
பிரபல இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் பேசியதாவது,”இப்ப இருக்கிற ஜெனரேஷன் மிக திறமையானவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் மைண்டில் ஏதாவது ஓடிக்கொண்டே இருக்கிறது. 20 நாளில் எடுத்த படம் மாதிரியே இல்லை. ஒரு காட்சிக்கே அத்தனை ஷாட் வைத்திருக்கிறார்.
பெரிய திட்டமிடலுடன் படத்தை தந்துள்ளார். Axess Film Factory டில்லிபாபு நல்ல படங்களாக, வெற்றிப்படங்களாக தயாரித்து வருகிறார் வாழ்த்துக்கள். நடிகர் பரத்தை எனக்கு பல காலமாக தெரியும். நல்ல உழைப்பாளி. கதாப்பாத்திரம் புரிந்து மிக அழகாக நடித்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது.
‘பரத் தான் முதல் காரணம்’
இயக்குநர் சக்திவேல் பேசியதாவது,”Axess Film Factory தமிழ் சினிமாவுக்கு நல்ல படைப்புகள் தந்து வருகிறார்கள். அவர்கள் தயாரிப்பில் என் முதல் படம் உருவாகியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இப்படத்தை குறுகிய காலத்தில் முடிக்க காரணம், தொழில்நுட்ப கலைஞர்களின் முழு பங்களிப்புதான் காரணம். பரத் தான் இந்த படம் உருவாக முதல் காரணம், அவர் மூலமாக தான் தயாரிப்பாள்ர் இந்த கதையை கேட்டு தயாரிக்க ஒப்புக்கொண்டார்.
அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த படத்தின் கதையை புரிந்துகொண்டு படத்திற்காக உழைத்தனர். வாணி போஜன் படத்தின் கதையை உணர்ந்து அதற்காக கடின உழைப்பை கொடுத்தனர். இந்த படம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.
‘நிறைய மோசமான அனுபவங்கள்…’
நடிகர் பரத் பேசியதாவது,”சினிமாவில் நிறைய மோசமான அனுபவங்கள் உள்ளது. ஒரு படம் உருவாவது அவ்வளவு எளிதில்லை. தயாரிப்பாளர் டில்லி பாபு அனைவரையும் மதிக்க கூடிய ஒரு நபர். இந்த கதை பற்றியும், இயக்குனர் பற்றியும் நான் கூறிய போது, கதையின் தன்மையை புரிந்து கொண்டு, இதை எடுக்க உடனே ஒப்புக்கொண்டார்.
இந்த படத்தை உருவாக்கியதற்கு தயாரிப்பாளருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். தயாரிப்பாளருக்கும், நடிகருக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுடனும் ஒருசேர ஒத்துபோக கூடிய நபர் இயக்குனர். இந்த படத்தில் நிறைய உணர்வுபூர்வமான அம்சங்கள் இருக்கிறது. கேஎஸ் ரவிக்குமார், வாணி போஜன் ஆகியோருடன் நடித்தது பெரிய மகிழ்ச்சி” என்றார்.
இப்படத்தில் பரத், வாணி போஜன் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மற்ற நடிகர்கள் மீர் கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி, அர்ஜை, நரேன் பாலாஜி, மாஸ்டர் அங்கித், மாஸ்டர் சாந்தனு மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் நவ. 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.