ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி அளவிலான திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தலைமை வகிக்க, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ் கண்ணா வரவேற்றார். திராவிட இயக்க வரலாறு குறித்து பேராசிரியர் கொளத்தூர் மணியும், மாநில சுயாட்சி குறித்து தொல்லியல் ஆய்வாளர் சூர்யா சேவியர் பேசினர்.
மேலும் இந்த கூட்டத்தில் மாவட்ட அவை தலைவர் சத்தியமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் அஹமது தம்பி மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சம்பத் ராஜா, கார்த்திகேயன், குமரகுரு, தனிக் கொடி, ராமநாதபுரம் வடக்கு, தெற்கு நகர் செயலாளர்கள் கார்மேகம், பிரவீன் தங்கம், மண்டபம் பேரூர் செயலாளர் அப்துல் ரஹ்மான் மரைக்காயர், ராமேஸ்வரம் நகர் செயலாளர் நாசர் கான், ராமநாதபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாகலிங்கம், திருப்புல்லாணி கிழக்கு, மேற்கு ஒன்றிய செயலாளர்கள் நாகேஸ்வரன், உதயகுமார், மண்டபம் கிழக்கு, மேற்கு, மத்தி ஒன்றிய செயலாளர்கள் நிலோபர் கான், பிரவீன் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ செய்தார்.