காஞ்சிபுரம் மாவட்டத்தில் தண்டவாளத்தில் தவறி விழுந்த 14 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்காளிமேடு பகுதியில் வசித்து வசிப்பவர் காளிதாஸ். இவரது மனைவி அன்னபூரணி. இவர்களுக்கு ரித்திஷ்(14), யுவனேஷ், விக்னேஷ் என்ற 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகனான ரித்திஷ் காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில் ரித்தீஷ் நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து பேசி கொண்டிருந்தான். பின்பு அங்கிருந்து வீட்டுக்கு செல்வதற்கு தண்டவாளத்தை கடந்து சென்றபோது திடீரென தவறி கீழே விழுந்து உள்ளான்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ரித்திஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.