டேராடூன்: நாட்டிலேயே முதல் முறையாக கடந்த அக்டோபர் 16ம் தேதி மத்தியப்பிரதேசத்தில் இந்தியில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பை உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து இரண்டாவது மாநிலமாக உத்தரகாண்டிலும் இந்தியில் மருத்துவ படிப்பு தொடங்கப்பட உள்ளது. இது தொடர்பாக அம்மாநில கல்வி துறை அமைச்சர் தான் சிங் ராவத் கூறுகையில், ‘‘இந்தி மொழிக்கு ஒன்றிய அரசு சிறப்பு கவனம் செலுத்துவதை கருத்தில் கொண்டு அடுத்த கல்வியாண்டு முதல் அரசு மருத்துவ கல்லூரிகளில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பு பயிற்றுவிக்கப்படும். இதற்காக 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளோம்’’ என்றார்.