பேருந்துக்குள் ஏறி மனுஸ்மிருதி நூலை வழங்கிய திருமா.. பரபரக்கும் அரசியல்

தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் மனுஸ்மிருதி நூல்களை வழங்க விசிக திட்டமிட்டுள்ள நிலையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு இலவசமாக மனுஸ்மிருதி நூலை திருமாவளவன் வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் பேசியதாவது, இந்து சமூகத்தின் நலனுக்காகவும், இந்து பெண்களின் நலனுக்காகவும் இந்த பிரதிகளை இலவசமாக வழங்கி வருகிறோம். இந்திய ஆரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட பின்னரும் இந்துக்கள் மனுஸ்மிருதியின் கோட்பாட்டைத்தான் பின்பற்றி வருகின்றனர்.

பார்ப்பனர்கள் அல்லாதவர்களை சூத்திரரக்ள் என்று மனுஸ்மிருதி சொல்கிறது. மனுஸ்மிருதியை அரசியல் மற்றும் கலாச்சார கொள்கையாக ஆர்எஸ்எஸ் அமைப்பு கொண்டிருக்கிறது. அதனையே அரசியல் அமைப்பு சட்டமாக மாற்ற ஆர்எஸ்எஸ் முயற்சி செய்து வருகிறது. சமூக நீதி வேண்டாம், சகோதரத்துவம் வேண்டாம் என்பதே மனுஸ்மிருதியின் அடிப்படை கருத்தியலாகும்

பார்ப்பன வர்ணத்தில் இருந்து சூத்திர வர்ணம் வரை நான்கு வர்ணங்களை சார்ந்த 50 விழுக்காட்டில் இருக்கும் பெண்கள் அனைவரும் சூத்திரர்களாக வழிநடத்தப்பட வேண்டும் என்பது மனுஸ்மிருதியின் வழிகாட்டுதல் ஆகும்.

எனவே, இது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் மனுஸ்மிருதி நூல்களை வழங்க திட்டமிட்டுள்ளது என்று திருமாவளவன் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.