தென்காசி மாவட்டம் கடையம் அருகே கரடி தாக்கியதால் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருத்தலிங்கபுரம் பகுதியை சேர்ந்த வைகுண்டமணி சிவசைலத்தில் இருந்து பெத்தான்பிள்ளை கிராமத்திற்கு மசாலா பொருட்கள் வியாபாரம் செய்வதற்காக சென்றுள்ளார்.
சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென குறுக்கே வந்த ஒற்றை கரடி அவரது இருசக்கர வாகனத்தை கீழே தள்ளி அவரை தாக்கி கடித்துக் குதறியுள்ளது.
கிராம மக்கள் அவரை காப்பாற்ற வந்த நிலையில் நாகேந்திரன், சைலேந்திரன் என்ற இருவரையும் கடித்து விட்டு சென்றுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பலத்த காயமடைந்த மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.