நாமக்கல்: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். நாமக்கல் மாவட்டம் பொம்மைக்குட்டைமேட்டில் அதிமுகவின் 51 ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும்.
இந்த கூட்டம் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிள்ளையார் சுழி. எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் அதிமுக அழிந்துவிடும் என்று கூறினார்கள். அதன்பின்னர் அனைத்து சதிகளையும் முறியடித்து ஆட்சி பொறுபேற்றார் ஜெயலலிதா. காலத்தால் அழிக்க முடியாத திட்டங்களை அதிமுக வழங்கியது. அதிமுக ஒன்றாகதான் உள்ளது. தமிழக முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களை அதிமுக கொண்டுவந்துள்ளது. காற்றை தடை செய்ய முடியாதது போல, அதிமுக ஆட்சிக்கு வருவதையும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.