இந்தியாவில் சிறுத்தை (Cheetah) இனம் முற்றிலுமாக அழிந்துவிட்டதாக 1952ஆம ஆண்டு அறிவிக்கப்பட்டது. வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட ஆக்கிரமிப்பு காரணமாக சிறுத்தை இனம் இந்தியாவில் அழிவை கண்டது. ஆசியாவிலேயே இந்தியாவில் மட்டும் காணப்பட்ட இந்த சிறுத்தை இனம் அழிந்து சுற்றுச்சுழலின் உணவு சங்கலி பாதிக்கப்பிற்கு உள்ளாகலாம் என சூழலியல் வல்லுநர்கள் கூறி வந்தனர்.
இதை தொடர்ந்து, அரை நூற்றாண்டுகள் கழித்து இந்தியாவில் மீண்டும் சிறுத்தை இனத்தை கொண்டு வருவதற்கு திட்டம் தீட்டப்பட்டது. அதன்படி ‘Project Cheetah’ என்ற திட்டத்தை, இந்திய அரசு கொண்டவந்தது. அதில், நமீபியா நாட்டில் இருந்து சிறுத்தைகளை கொண்டுவந்து, இந்தியாவில் அதன் இனத்தை பெருக்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டது.
இதற்காக, இங்கு அவை வாழ்வதற்கான தகுந்த சூழல் உள்ள இடத்தை தேர்வு செய்யும் பணியில் மத்திய அரசு நீண்ட காலமாக ஈடுபட்டது. அதில், மத்திய பிரதேசத்தில் உள்ள குணே தேசிய பூங்கா சிறுத்தைகள் வாழ தகுதியான இடமாக கண்டறியப்பட்டது. இந்தாண்டு தொடக்கத்தில், நம்பீயா அரசுடன், இந்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை போட்டது. அதன்மூலம், நமீபியாவில் இருந்து 5 பெண் சிறுத்தைகள், 3 ஆண் சிறுத்தைகள் என மொத்தம் 8 சிறுத்தைகள் தனி விமானம் மூலம் இந்தியாவிற்கு கடந்த செப்டம்பர் மாதம் கொண்டு வரப்பட்டது.
Two of the eight cheetahs brought from Namibia released to bigger enclosure for further adaptation to Kuno National Park, #MadhyaPradesh.
In a tweet, PM @narendramodi expresses happiness that all cheetahs are healthy, active and adjusting well. https://t.co/3Y1FSSMopN
— All India Radio News (@airnewsalerts) November 6, 2022
மத்திய பிரதேசத்தின் குணே தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் அந்த சிறுத்தைகளுக்கு ரேடியா காலர்கள் பொருத்தப்பட்டு, அவை செயற்கைகோள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட உள்ளன. அதனை 24 மணிநேரமும் கண்காணிக்க தனிக்குழு ஒன்றும் செயல்பட்டு வருகிறது. மேலும், அந்த சிறுத்தைகளை கூண்டில் இருந்து குணே தேசிய பூங்காவில் திறந்தவிட்ட பிரதமர் மோடி, அவற்றுக்கு பெயரும் சூட்டினார்.
இநிநிலையில், ஆஷா என பெயரிடப்பட்ட சிறுத்தை, நமீபியாவில் இருந்து இந்தியா வந்தபோதே கர்ப்பமாக இருந்துள்ளது எனவும், பயணத்தால் ஏற்பட்ட அழுத்தமும், இட மாறுதல் காரணமாகவும் சிறுத்தையின் கரு கலைந்துவிட்டதாகவும் பாதுகாப்பு நிதியம் (CCF) தெரிவித்துள்ளது.
நமீபியாவின் காட்டுப்பகுதியில் இருந்தபோது, ஆஷாவிடம் நடத்தப்பட்டட ஆரம்பகால மருத்துவ பரிசோதனையில், அதன் வயிற்றில் கரு இருப்பதற்கான தடயம் தெரிந்துள்ளது. அதன்பின்னர், இந்தியா வந்த பிறகு, மருத்துவ பரிசோதனை வசதி குறைவினாலும், முறையான வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாததால் ஆஷாவிற்கு மருத்துவப் பரிசோதனை காலதாமதாமகியுள்ளது.
ஆஷாவின் கர்பம் குறித்து, சிறுத்தை பாதுகாப்பு நிதியத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குநனருமான லாரி மார்க்கர் கூறுகையில்,”காட்டிலிருந்து ஆஷா வெளியே வந்து 100 நாள்கள் கடந்தவிட்டது. சிறுத்தைகளுக்கு கர்ப்பக் காலம் என்பது 93 நாள்கள்தான். தற்போது, ஆஷா சிறுத்தை குட்டிகளை போட வாய்ப்பில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
சிறுத்தைகளை தனிமைப்படுத்திவைத்திருந்த போது, ஆஷா குட்டிகளை போட்டிருந்தால், அவை மேலும் இரண்டு மாதங்கள் அங்கு இருக்க வேண்டியதாக இருந்திருக்கும். ஆஷாவை பிடித்தபோதே அது கர்ப்பமாகதான் இருந்தது. பயணத்தினால் ஏற்பட்ட அழுத்ததால்தான் கர்ப்பம் கலைந்திருக்கிறது என்ற முடிவுக்கு தற்போது வர முடியாது. சிறுத்தைகளுக்கு கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் இதுபோன்று நடப்பது இயல்புதான்” என்றார்.
முன்னதாக, தொற்று நோய்தடுப்புக்கான தனிமைப்படுத்துதலுக்கு பின் 2 சிறுத்தைகள் வன பகுதியில் விடுவிக்கப்பட்டு உள்ளன என பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்து உள்ளார்.