தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன்
. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். மேலும் சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாகவும் உள்ளார்.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவியை ஏற்க வேண்டும் என்று, கடந்த ஓராண்டாகவே திமுகவினர் மற்றும் அமைச்சர் வட்டாரத்தில் கோரிக்கை எழுந்தபடி உள்ளது.
உதயநிதி அமைச்சர் பதவி ஏற்க வேண்டும் என, முதன்முதலில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொளுத்தி போட ஸ்டாலினுக்கு நெருக்கம் காட்டும் அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்ட மற்றவர்கள் கபால் என, பிடித்துக்கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக அமைச்சர் பதவியேற்க வேண்டும் என, அமைச்சர்கள் மற்றும் திமுக பெரும்புள்ளிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதில் ஒருப்படி அதிகமாக போய் வருங்கால முதல்வர் உதயநிதி என, அமைச்சர் செஞ்சி மஸ்தான் சமீபத்தில் கூறி உள்ளது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
எனவே, உதயநிதி ஸ்டாலின் எந்த நேரத்திலும் அமைச்சரவையில் இடம் பிடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் நிலவி வருகிறது. அதே சமயம், கட்சி மேலிடமும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படுவதாக பரவும் தகவல்களுக்கு எந்த விதமான மறுப்பும் சொல்லாமல் மவுனம் காத்து வருகிறது.
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்கள் உதயநிதி ஸ்டாலினிடம், ‘உங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதா?’ என, கேள்வி எழுப்பினர்.
அதற்கு உதயநிதி ஸ்டாலின், ‘தலைமை முடிவு எடுக்கும்’ என்று மழுப்பலாக பதிலளித்து இருந்தார். இதன் மூலம் அமைச்சர் பதவி வழங்கப்படுவது உறுதிதான் என்பது போல் பேசப்பட்டது.
இந்நிலையில் ஜாதகம் சரியில்லாத காரணத்தால் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்குவதில் இழுபறி நீடிப்பதாகவும் அதை நிவர்த்தி செய்ய குடும்ப உறுப்பினர்கள் தீவிரம் காட்டி வருவதாகவும் சமீபத்தில் கூறப்பட்டது.
இதை ஒட்டுமொத்த திமுகவினரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த சூழலில் தற்போது ஜாதக கட்டங்கள் சீராகி இருப்பதாகவும் இனி அமைச்சர் பதவி என்ன முதல்வர் பதவியே கூட தாராளமாக கொடுக்கலாம் என்றும் ஜோதிட வல்லுநர்கள் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த குடும்பத்தினர் அமைச்சர் பதவிக்கு நாள் குறிக்க உட்கார்ந்தபோது உதயநிதியின் முதல் அறிவிப்பு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க வேண்டும் என ஆலோசித்துள்ளனர்.
அப்போது ஓரிரு மாதங்களில் பொங்கல் பண்டிகை வருவது நினைவுக்கு வந்துள்ளது. இதையடுத்து, தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு இந்த முறை உதயநிதி வாயிலாக வழங்கலாம் என முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதற்கு ஏற்றது போல், அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்து தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலினை நியமனம் செய்து பொங்கல் பரிசுக்கு அறிவிப்பு வெளியிட செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.