இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜகார்தா,

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது.

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மத்திய இந்தோனசியா குலுங்கியது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

தீவுக்கூட்டங்கள் நிறைந்த இந்தோனாசியாவில் நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகும். இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.