ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகாசாகி நகரங்கள் மீது நடத்தப்பட்ட அணுகுண்டு தாக்குதலை சுட்டிக்காட்டி ரஷ்ய அதிபர் புதின் பேசியிருப்பது, மேற்கத்திய நாடுகளின் தலைவர்களை கலக்கமடைய செய்துள்ளது.
2ம் உலக போரின் இறுதியில் நடத்தப்பட்ட அத்தாக்குதலுக்கு பிறகு, ஜப்பான் படைகள், நேச நாடுகளிடம் சரணடைந்தன.
இதை சுட்டிக்காட்டி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் உரையாற்றிய அதிபர் புதின், போரில் வெற்றி பெற பெரிய நகரங்களை தாக்க வேண்டிய அவசியமில்லை என்றும், ‘2ம் உலகப் போரின் போது நிகழ்த்தப்பட்ட அணுகுண்டு தாக்குதல் அதற்கு ஒரு சிறந்த உதாரணம்’ என்றும் குறிப்பிட்டதாக ‘தி டெய்லி மெயில்’ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.