நைஜீரியாவின் வடமேற்கு பகுதியான கட்சினா மாநிலத்தில் சமீபமாக ஆட்கடத்தல் சம்பவம் அதிகரித்து வருகிறது.
ஆயுதமேந்திய கும்பல் பள்ளிகள், மருத்துவமனைகள், பண்ணைகளில் இருந்து மக்களைக் கடத்திச் சென்று அவர்களது உறவினர்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கும் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் கம்ஃபானின் மைலாஃபியா மற்றும் குர்மின் டோகா கிராமங்களுக்கு இடையில் அமைந்துள்ள பண்ணையில் பயிர்களை அறுவடை செய்யும் போது 30 க்கும் மேற்பட்ட குழந்தைகள் அக்டோபர் 30 அன்று கடத்தப்பட்டனர்.
8 மற்றும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கடத்தி அவர்களின் பெற்றோரிடம் இருந்து, ரூ.2.54 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் பெற்றோர் பணத்தை கொடுத்து தங்கள் குழந்தைகளை மீட்டுள்ளனர்.
கடத்தலில் ஈடுபட்ட ஒரு சிலர் ஓடிவிட்ட நிலையில் மற்றவர்களை போலீஸ் சுற்றிவளைத்து கைது செய்தனர். கடத்தப்பட்ட குழந்தைகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
newstm.in