சென்னை-மைசூர் இடையே சோதனை ஓட்டத்தை தொடங்கியது வந்தே பாரத் ரயில்!

வரும் 11ம் தேதி நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்! 

மத்திய அரசு மக்கள் ரயில்களில் அதிவேகப் பயணம் மேற்கொள்ள வந்தே பாரத் எனும் திட்டத்தை கொண்டுவந்தது. அதன்படி தற்பொழுது வரை இந்தியாவில் நான்கு வழித்தடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் ஏற்கனவே டெல்லி, வாரணாசி, மும்பை, அகமதாபாத், குஜராத், இமாச்சல பிரதேஷ் ஆகிய நான்கு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தென்னிந்தியாவில் முதல் வந்தே பாரத் ரயில் திட்டம் சென்னையில் இருந்து மைசூர் மார்க்கத்தில் இயக்கப்பட உள்ளது. 

இதற்கான சோதனை ஓட்டம் இன்று காலை தொடங்கியது. வந்தே பாரத் ரயில் சென்னை-மைசூர் மார்க்கத்தில் அதிகபட்சமாக 130 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. சராசரியாக மணிக்கு 73 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இந்த காலை 5:50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயிலானது 07:25 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்தையும், 8:30 மணிக்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தையும் கடந்து 10:30 மணிக்கு பெங்களூர் ரயில் நிலையத்தை சென்று அடைகிறது. 

பெங்களூர் ரயில் நிலையத்தில் ஐந்து நிமிடம் இடைவேளைக்குப் பிறகு புறப்படும் வந்தே பாரத் ரயிலானது மதியம் 12.30 மணிக்கு மைசூர் ரயில் நிலையத்தை சென்றடைகிறது. பிறகு மதியம் 01:05 மணிக்கு மைசூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் வந்தே பாரத் ரயில் 03:00 மணிக்கு பெங்களூர் ரயில் நிலையத்தை வந்தடைகிறது. பிறகு அங்கிருந்து புறப்பட்டு 04:55 மணிக்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தையும் 06:00 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்தை கடந்து இரவு 07:35 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைகிறது. சென்னை மற்றும் மைசூர் இடையான வந்தே பாரத் திட்டத்தினை வரும் 11ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.