ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

ஒகேனக்கல்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. பென்னாகரம், கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி இந்த 2 அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததன் காரணமாக இன்று காலை 6 மணி நிலவரப்படி 14 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.