தமிழக மாவட்டங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் 09ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடற்கரை பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, 07.11.2022 மற்றும் 08.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
09.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
10.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
11.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
சென்னைகான வானிலை முன்னறிவிப்பு:
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
களியல் (கன்னியாகுமரி) 6, மன்னார்குடி (திருவாரூர்) தலா 5, சிவகங்கை (சிவகங்கை), திருக்குவளை (நாகப்பட்டினம்), சுருளக்கோடு (கன்னியாகுமரி), மயிலாடுதுறை, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), கமுதி ARG ராமநாதபுரம்), புத்தன் அணை (கன்னியாகுமரி), கமுதி (ராமநாதபுரம்) தலா 4, வைப்பார் (தூத்துக்குடி), திண்டுக்கல், திருப்புவனம் (சிவகங்கை), பாண்டவையார் (திருவாரூர்), ஓட்டன்சத்திரம் (திண்டுக்கல்), மஞ்சளாறு (தஞ்சாவூர்), தனிமங்கலம் (மதுரை), குன்னூர் PTO (நீலகிரி), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), வேடசந்தூர் (திண்டுக்கல்), கீழ் கோதையார் ARG (கன்னியாகுமரி), பவானிசாகர் (ஈரோடு), சோலையார் (கோவை), புவனகிரி (கடலூர்), கோடியக்கரை (நாகப்பட்டினம்), பெரியார் (தேனி), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), பாலவீதி (கரூர்), மணல்மேடு (மயிலாடுதுறை), வெம்பக்கோட்டை (விருதுநகர்), குழித்துறை (கன்னியாகுமரி), நகுடி (புதுக்கோட்டை), கெத்தை (நீலகிரி), மேலூர் (மதுரை), பழனி (திண்டுக்கல்), திருவையாறு (தஞ்சாவூர்), சின்னக்கல்லார் (கோவை) தலா 3, நாகர்கோவில் (கன்னியாகுமரி), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), கடவூர் (கரூர்), திருமயம் (புதுக்கோட்டை), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), வால்பாறை PTO (கோவை), திருவாரூர், அழகரை எஸ்டேட் (நீலகிரி), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), கொடவாசல் (திருவாரூர்), கன்னியாகுமரி, பர்லியார் (நீலகிரி), வலங்கைமான் (திருவாரூர்), சிற்றாறு (கன்னியாகுமரி), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), சின்கோனா (கோயம்புத்தூர்), நிலக்கோட்டை (திண்டுக்கல்), நீடாமங்கலம் (திருவாரூர்), தஞ்சாவூர், சேத்தியாத்தோப்பு (கடலூர்), ஆயின்குடி (புதுக்கோட்டை), பாபநாசம் (திருநெல்வேலி), அறந்தாங்கி (புதுக்கோட்டை), கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூர்), சீர்காழி (மயிலாடுதுறை), திருப்பத்தூர் (சிவகங்கை), ஜெயம்கொண்டம், கொடைக்கானல் (திண்டுக்கல்), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), எட்டயபுரம் (தூத்துக்குடி), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), கயத்தாறு ARG (தூத்துக்குடி), பேரையூர் (மதுரை), திருமூர்த்தி அணை (திருப்பூர்), செட்டிகுளம் (பெரம்பலூர்), அண்ணாமலை நகர் (கடலூர்), சாத்தூர் (விருதுநகர்), கிண்ணக்கொரை (நீலகிரி), கடம்பூர் (தூத்துக்குடி), கொட்டாரம் (கன்னியாகுமரி) தலா 2, பொன்னனியாறு அணை (திருச்சி), கொள்ளிடம் (மயிலாடுதுறை), சிவலோகம் (கன்னியாகுமரி), மயிலாடி (கன்னியாகுமரி), ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி), இடையபட்டி (மதுரை), பாளையங்கோட்டை (திருநெல்வேலி), மைலம்பட்டி (கரூர்), நன்னிலம் (திருவாரூர்), திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி), மணிமுத்தாறு (திருநெல்வேலி), தேக்கடி (தேனி), முதுகுளத்தூர் (இராமநாதபுரம்), தாராபுரம் (திருப்பூர்), தக்கலை (கன்னியாகுமரி), கே பாலம் (நீலகிரி), விராலிமலை (புதுக்கோட்டை), திருவாடானை (இராமநாதபுரம்), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), முத்துப்பேட்டை (திருவாரூர்), கீழச்செருவாய் (கடலூர்), துறையூர் (திருச்சி), சிதம்பரம் AWS (கடலூர்), உசிலம்பட்டி (மதுரை), திருமங்கலம் (மதுரை), காட்டுமன்னார் கோயில் (கடலூர்), திருப்பூர் (திருப்பூர்), பெருங்களூர் (புதுக்கோட்டை), மானாமதுரை (சிவகங்கை), சிவகிரி (தென்காசி), அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்), தேவகோட்டை (சிவகங்கை), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), குப்பனம்பட்டி (மதுரை), கிளானிலை (புதுக்கோட்டை), சிவகாசி (விருதுநகர்), கயத்தாறு (தூத்துக்குடி), புலிப்பட்டி (மதுரை), திருச்சுழி (விருதுநகர்), எமரலாடு (நீலகிரி), திருமானூர் (அரியலூர்), காரைக்கால், பேராவூரணி (தஞ்சாவூர்), கடலாடி (ராமநாதபுரம்), மதுக்கூர் (தஞ்சாவூர்), அகரம் சீகூர் (பெரம்பலூர்), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), எறையூர் (பெரம்பலூர்), மடத்துக்குளம் (திருப்பூர்), கழுகுமலை (தேனி), சோத்துப்பாறை (தேனி), சத்தியமங்கலம் (ஈரோடு), ராதாபுரம் (திருநெல்வேலி), கிருஷ்ணராயபுரம் (கரூர்), சேரன்மகாதேவி (திருநெல்வேலி), பெலாந்துறை (கடலூர்), திருச்சிராப்பள்ளி சந்திப்பு (திருச்சி), கும்பகோணம் (தஞ்சாவூர்), வல்லம் (தஞ்சாவூர்), ராஜபாளையம் (விருதுநகர்), மணப்பாறை (திருச்சி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), பொன்னமராவதி (புதுக்கோட்டை), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), ஆண்டிப்பட்டி (தேனி), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), கல்லந்திரி (மதுரை), இரணியல் (கன்னியாகுமரி), கோவில்பட்டி (தூத்துக்குடி), புது வேட்டக்குடி (பெரம்பலூர்), தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூர்), புதுக்கோட்டை (புதுக்கோட்டை), திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), புடலூர் (தஞ்சாவூர்), பள்ளிக்கரணை ARG (சென்னை) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
09.11.2022: தென்மேற்கு வங்கக்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அத்தனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
10.11.2022: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
11.11.2022: தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சமீபத்திய வானிலை தகவல் பற்றி மேலும் தெரிந்துகொள்ள mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்.