புதுடெல்லி: பெண்களுக்கு சம உரிமை என்பது ஒரு புறம் இருக்கட்டும், படித்து, சமூக விவகாரங்களை அறிந்த பெண் பத்திரிகையாளர்களே ஆன்லைனில் குறிவைக்கப்படும் அவலம் தொடர்கிறது. இதை சொல்வது, யாரோ ஓரிரு பெண் பத்திரிக்கையாளர்கள் அல்ல என்பது முக்கியமான விஷயம். பெரும்பாலான பெண் பத்திரிகையாளர்கள் ஆன்லைனில், வெறுப்பு, துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைக்கு இலக்காகிறார்கள் என்று அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. ஆய்வு ஒன்றில் பங்கேற்ற பெண் பத்திரிக்கையாளர்களில், 25 சதவீதம் பேர் தங்களுக்கு உடல் ரீதியான வன்முறை அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர், இதில் மரண அச்சுறுத்தல்களும் அதிகம் என்பது கவலை தரும் விஷயம் ஆகும்.
18 சதவீதம் பேர் பாலியல் வன்கொடுமை அச்சுறுத்தல்களைப் பெற்றுள்ளதாக கூறும் ஆய்வு, 48 சதவீதம் பெண்கள், தங்கள் தனிப்பட்ட சமூக ஊடக செய்திகளில் தேவையற்ற நபர்களால் காழ்ப்புணர்ச்சி மற்றும் அருவருக்கத்தக்க கருத்துகளை பெறுவதாக கூறியுள்ளனர்.
பெண் பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான ஆன்லைன் வன்முறை பத்திரிகை சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்று ஒரு புதிய உலகளாவிய அறிக்கை காட்டுகிறது, இது உலகம் முழுவதும் பல பெண் பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு வழிவகுக்கும் போக்காக இருக்கிறது.
மேலும் படிக்க | மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு கோரிய வழக்கு தள்ளுபடி! எதனால் ?
பத்திரிக்கையாளர்களுக்கான சர்வதேச மையம் (ICFJ) மற்றும் ஷெஃபீல்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை 15 நாடுகளில் 1,000 க்கும் மேற்பட்ட பெண் பத்திரிகையாளர்களிடம் கேட்கப்பட்ட பதில்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.
இந்த ஆய்வில் பங்கேற்ற பெரும்பாலான ஊடகவியலாளர்கள், தங்கள் பத்திரிகை வாழ்க்கையில் சில வகையான ஆன்லைன் துஷ்பிரயோகம் மற்றும் அச்சுறுத்தல்களை அனுபவித்ததாகக் கூறினர். உலகளவில், தொழிலில் உள்ள முக்கால்வாசி பெண்கள் ஆன்லைன் வெறுப்பையும் வன்முறையையும் பெற்றுள்ளனர் என்று ஆராய்ச்சி சுட்டிக் காட்டுகிறது.
“ஆணாதிக்க விதிமுறைகள் ஆக்ரோஷமாக வலுப்படுத்தப்படும் ஆன்லைன் சூழலில், பெண்களுக்கு எதிரான ஆஃப்லைன் வன்முறைகளும், பாலியல் துன்புறுத்தல்களும் குறைவாக இல்லை. பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றம் சாட்டுதல் மற்றும் அவமானப்படுத்தும் போக்கும் தொடர்கிறது” என்று அண்மை அறிக்கை தெரிவித்து இருக்கிறது.
“பெண் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் என்ற விஷயத்தில், நாம் இப்போது நெருக்கடியான கட்டத்தில் இருக்கிறோம் என்று எங்கள் அறிக்கை கண்டறிந்துள்ளது” என்று ஆய்வின் மூத்த ஆராய்ச்சியாளர் பேராசிரியர் கலினா போன்ட்சேவா கூறினார்.
மேலும் படிக்க | EWS reservation: அரசு வேலைகளில் 10% இட ஒதுக்கீடு உறுதியாகுமா? உச்ச நீதிமன்ற தீர்ப்பு
ஜனநாயகத்திற்கு “சுதந்திரமான பத்திரிகை” இன்றியமையாதது, தவறான செயல்களை அம்பலப்படுத்துவது மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGs) முன்னேற்றுவதுஅவசியம்” என்று, ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இந்த மாத தொடக்கத்தில் வலியுறுத்தியது குறிப்பிடத்தகக்து.
“இந்த ஆண்டு 70க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த குற்றங்களில் பெரும்பாலானவை தீர்க்கப்படாமல் போய்விட்டன. இதற்கிடையில், கணிசமான எண்ணிக்கையிலான பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில், பத்திரிக்கையாளர்களுக்கு, சிறை தண்டனை, வன்முறை மற்றும் மரண அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன.” ஐ.நா தலைவர் ஒரு செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் தளங்களில் பெண் பத்திரிக்கையாளர்கள் கொடூரமான முறையில் குறிவைக்கப்படுகிறார்கள் என்ற எச்சரிக்கை மணியை இந்த அறிக்கை அடிக்கிறாது. பெரிய தொழில்நுட்ப ஜாம்பவான்கள் தங்கள் தளங்களை பெண் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பான இடமாக மாற்றும் வகையில் அவர்களின் வழிமுறைகளை மாற்றிக்கொள்ளுமாறு, இந்த அறிக்கை கேட்டுக்கொள்கிறது.
மேலும் படிக்க | மாற்றத்தை ஏற்படுத்த பாஜக உழைக்கிறது – அண்ணாமலை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ