10% இடஒதுக்கீடு வழக்கு ஏற்பும் மறுப்பும் – உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு முழு விவரம்!

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில் இன்றைய தினம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் மூன்று நீதிபதிகள் 10% இடஒதுக்கீடு முறையை சரி என்றும் இரண்டு நீதிபதிகள் தவறு என்றும் தீர்ப்பு வழங்கினர்.

இதில் மிக முக்கியமான விஷயம் 10% இட ஒதுக்கீடு முறையை பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு மட்டும் வழங்குவது தவறு என்றும் இந்த இட ஒதுக்கீடு முறையில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி ஆகியோரை சேர்க்காதது தவறு என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு யு லலித் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதி ரவீந்திர பட் ஆகியோர் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

அதாவது பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது என்பது சரிதான் என்றும் அதே நேரத்தில் எஸ்சி எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினரை விலக்கி வைத்தது தான் தவறு என்றும் இந்த இரண்டு நீதிபதிகளும் உறுதிப்படுத்தி உள்ளனர். இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டம் அல்ல என 10% இட ஒதுக்கீடு முறைக்கு எதிரான மனுதாரர்களான திமுக உள்ளிட்ட தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

image
இந்த வழக்கில் நீதிபதிகள் ஐவரும் வழங்கிய தீர்ப்பின் விவரம், பின்வருமாரு:
தினேஷ் மகேஸ்வரி:

`பத்து சதவீத இட ஒதுக்கீடு என்பது பிற்படுத்தப்பட்ட வகுப்பினரது இட ஒதுக்கீடு பிரதிநிதித்துவத்தை மீறுகிறதா’ `பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காமல் இருப்பது, சமத்துவ குறியீட்டை மீறும் வகையில் உள்ளதா’ மற்றும் `10% இட ஒதுக்கீடு வழங்குவது என்பது 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் முறையில் அடிப்படை அமைப்பை சிதைக்கிறதா’ என்ற கேள்விகள் எழக்கூடிய நிலையில், இட ஒதுக்கீடு முறை என்பது சமூக மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கியவர்களுக்கானதாக மட்டுமல்லாமல் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும் வழங்கப்படலாம்.
image
இது அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை சிதைக்காது, அதேபோல 50 சதவீத இட ஒதுக்கீடு முறையையும் இது பாதிக்காது/ எனவே பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட 103 வது அரசியல் சாசன சட்ட திருத்தம் செல்லும்.

பிலா திரிவேதி:

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதை நியாயமற்ற வகைப்பாடு என கூற முடியாது. இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வந்தது நாடாளுமன்றத்தின் உறுதியான நடவடிக்கையாக கருதப்பட வேண்டும். பொருளாதரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினரை தனி வகையாக வகைப்படுத்தியது சரியானதே. இதை சட்டவிரோதம் என கூற முடியாது. எனவே 103 வது சட்ட திருத்தத்தை உறுதி செய்கிறேன்.
image

சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கக்கூடிய சூழலில் இட ஒதுக்கீடுக்கான நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அது சமூகத்தின் பெரிய நலன்களுக்கானது. அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்களால் இட ஒதுக்கீடு கொள்கைகளுக்காக வகுக்கப்பட்ட கால அவகாசம் 75 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் முழுமையாக அடைய முடியவில்லை.

பர்திவாலா:

இட ஒதுக்கீடு என்பது முடிவற்றதாக இருக்க முடியாது. அப்படி இருந்தால் அது குறிப்பிட்ட ஆதாயத்தை நீண்ட நாட்களுக்கு எதிர்பார்ப்பதாக மாறிவிடும். எனவே நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி மற்றும் விழா திருவெய்தி ஆகியோர் வழங்கிய தீர்ப்புடன் தான் ஒத்துப் போகிறேன்.
image

ரவீந்திர பட்:

நமது அரசியல் சாசன அமைப்பு விதிவிலக்குகளை அனுமதிக்காது. ஆனால் 10% இட ஒதுக்கீடு முறை என்பது இத்தகைய விதிவிலக்கை உருவாக்குகிறது இந்த சட்ட திருத்தம். சமூக நீதியின் கட்டமைப்பையும் அதன் அடிப்படைக் கட்டமைப்புகளையும் குறை மதிப்பீடு செய்கிறது. பிரிவு 16 (1), (4) ஆகியவை அனைவருக்குமான சமத்துவ கொள்கையை வலியுறுத்துகிறது. ஆனால் இந்த இட ஒதுக்கீடு அதனை மீறும் வகையில் இருக்கிறது இந்த இட ஒதுக்கீட்டில் இருந்து பொருளாதாரம் மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கிய அவர்களை விலக்கி வைப்பது என்பது தவறானது. மேலும் இந்த சட்ட திருத்தம் அரசியல் சாசன ரீதியாக பாகுபாடு காட்டப்படுவதாக உள்ளது.
image
எஸ்சி, எஸ்டி, ஓபிசி ஆகிய பிரிவுகளில் உள்ள ஏழைகளை பொருளாதார ரீதியாக பின் தங்கிய வகுப்பில் இருந்து விலக்கி வைப்பது என்பது அரசியல் சாசனம் தடை செய்த பாகுபாடுகளை நடைமுறைப்படுத்துவதாக உள்ளது. சமத்துவ குறியீட்டின் இதய பகுதியை தாக்கும் வகையில் உள்ளது. 50 சதவீத இட ஒதுக்கீட்டின் வரம்பின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்ன குறிப்பிடுவது பொருத்தமானதாகும் ஏனென்றால் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான சட்ட திருத்தம் விதிமுறை மீறல் என கருதப்பட்டது எனவே இந்த தீர்ப்பு அந்த வழக்கின் மீதுள்ள கேள்விகளை எழுப்பும். மேலும் 50 சதவிகித இட ஒதுக்கீட்டில் விதிமுறை மீறலை அனுமதிப்பது பிரிவினையை வழிவகுக்கும்.

எவரேனும் சொந்த மதத்தின் பிரத்தியேக வாழ்வு மற்றும் பிறருடைய அழிவு பற்றி கனவு கண்டால், நான் அவருக்கு பரிதாபப்படுகிறேன் என்ற விவேகானந்தரின் வாக்கியத்தை சுட்டிக்காட்டி பொருளாதார அளவுகோலின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதில் விதிமுறை மீறல் இல்லை அதே வேளையில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்ற பிரிவில் எஸ்சி எஸ்டி ஓபிசி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை விளக்கி வைப்பது அடிப்படை கட்டமைப்பை மீறுவதாகும் அந்த அடிப்படையில் சட்ட திருத்தம் 103 சட்டவிரோதம்.
தலைமை நீதிபதி யு யு லலித்:
நீதிபதி ரவீந்திர பட் வழங்கிய தீர்ப்புடன் கால் ஒத்துப்போகிறேன்.
இவ்வாறாக 5 நீதிபதிகளும் தீர்ப்பளித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.