அம்பேத்கர் சிலை உடைப்பு.. போராடிய பெண்கள் மீது போலீசார் சரமாரி தாக்கு..!

அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை ஆபாச வார்த்தைகளால் திட்டி, அவர்கள் மீது போலீசார் சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

உத்தரப் பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டம் ஜலால்பூர் பகுதியில் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. இந்நிலையில், அந்த சிலை அடையாளம் தெரியாத நபர்களால் இன்று உடைக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், அவர்களை கலைந்து செல்லும்படி கூறினர்.

இதனால், ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, போலீசார் லத்தி தாக்குதல் நடத்தினர்.

இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை ஆபாச வார்த்தைகளால் திட்டி, அவர்கள் மீது போலீசார் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். போலீசார் தாக்கியதில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.