பிரான்சில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு ஒரு முக்கிய செய்தி: சிலருக்கு நல்ல செய்தி, சிலருக்கு கெட்ட செய்தி…


பிரான்சில் வாழும் புலம்பெயர்ந்தோரில் சிலரை நாடுகடத்துவது தொடர்பில் திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில், பிரான்ஸ் பொருளாதாரத்துக்கு தங்கள் பங்களிப்பை ஆற்றும் புலம்பெயர்ந்தோருக்கு ஒரு நல்ல செய்தியும் உள்ளது. 

கெட்டவர்களிடம் கடுமையாகவும், விதிகளை மதித்து நடப்பவர்களிடம் இரக்கத்துடனும் நடந்துகொள்ள இருப்பதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Gérald Darmanin தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Gérald Darmanin மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் Olivier Dussopt ஆகிய இருவரும் ஊடகம் ஒன்றிற்கு கூட்டாக அளித்த பேட்டி ஒன்றில்,புலம்பெயர்தலையும் வேலைவாய்ப்பையும் சமநிலைப்படுத்தும் ஒரு விடயம் குறித்த சில கருத்துக்களை முன்வைத்தார்கள்.

பிரான்சில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு ஒரு முக்கிய செய்தி: சிலருக்கு நல்ல செய்தி, சிலருக்கு கெட்ட செய்தி... | France Attempts To Match Immigration Policies

© UNHCR/Kate Thompson-Gorry 

2023இல், புதிய புலம்பெயர்தல் மசோதா ஒன்று நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு கொண்டுவரப்பட உள்ளது. அது, ஆவணங்களற்ற சில புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துதல் மற்றும் ஆவணங்களற்ற சில புலம்பெயர்ந்தோருக்கு குடியிருப்பு அனுமதியளிப்பதைக் குறித்ததாகும்.

அதாவது, ஏற்கனவே பிரான்சில் வாழ்ந்துவரும் ஆவணங்களற்ற சில புலம்பெயர்ந்தோருக்கு, பிரான்சில் தொழிலாளர்கள்தட்டுப்பாடு நிலவும் துறைகளில் அவர்கள் பணியாற்ற விரும்பும் பட்சத்தில், குடியிருப்பு அனுமதி வழங்க திட்டம் ஒன்று தயாராகி வருகிறது.
 

ஆனால், அவை எந்தெந்த துறைகள் என்பது குறித்து அமைச்சர்கள் இருவருமே தெரிவிக்கவில்லை.

பிரான்சைப் பொருத்தவரை கட்டுமானத்துறை, உணவகங்கள் மற்றும் வேளாண்மைத்துறை ஆகிய துறைகள் பெருமளவில் வெளிநாட்டுப் பணியாளர்களை நம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.