தமிழக மாவட்டங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் 09ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடற்கரை பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதற்கிடையில் பரமக்குடி வைகை ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, கடக்கவோ வேண்டாம் என வருவாய் வட்டாட்சியர் அறிவிப்பு, தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி யாரும் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வைகை ஆற்றில் உயிருக்கு ஆபத்தான செயல்களை செயல்படுத்த வேண்டாம் என ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அறிவிப்பு/ எச்சரிக்கை /வேண்டுகோள்/ விடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வைகை ஆறு மற்றும் வைகை ஆற்றின் விவசாய பாசனத்திற்கு நீர் பங்கீடு வழங்கும் இடது வலது பிரதான கால்வாய்களில் நீர் கடத்தும் பணிகளை பொதுப்பணித்துறை ஊழியர்கள் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர் என்று பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அதிகளவு வரும் மழைநீர் வெள்ளம் ஆற்று நீர் போக்கு வழியே கடத்தப்படும், இதனால் வைகை ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கடந்து செல்லவோ வேண்டாம் என இராமநாதபுரம் மாவட்ட பரமக்குடி வட்ட வருவாய்த்துறை நிர்வாகத்தின் சார்பாக தடை விதிக்கப்பட்டுள்ளது இதனை பொதுமக்கள் பின்பற்ற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.