ஒவ்வொரு கல்வியாண்டிலும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத் தேர்வுகள் நடைபெறுவது வழக்கம். தேர்வு முடிவுகள் மே மாத இறுதி அல்லது ஜூன் மாத துவக்கத்தில் வெளியாகி பிறகு மாணவர்கள் சேர்க்கைத் தொடங்கும்.அந்த வகையில், 2022 – 23ஆம் கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வு முடிவுகளை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ். தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைப்பெறும் எனவும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 5 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைப்பெறும் எனவும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைப்பெறும் எனவும் அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 12-ஆம் வகுப்புத் தேர்வை சுமார் 8.8 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.11-ஆம் வகுப்பு சுமார் 8.50 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 10 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.