புதுடில்லி: டுவிட்டர் பயனாளர்கள் போலி டுவிட்டர் கணக்களை உருவாகி ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டால் அந்த கணக்குகள் எந்த வித எச்சரிக்கையும் விடுக்கப்படாமல் நிரந்தரமாக நீக்கப்படும் என ‘டுவிட்டர்’ சமூக வலைதள உரிமையாளர் எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும் டுவிட்டர் சமூக வலை தளத்தை, மிகப் பெரும் பணக்கார தொழிலதிபர் எலான் மஸ்க் சமீபத்தில் வாங்கினார். இதைத் தொடர்ந்து, அவர் அதன் சேவை மற்றும் நிர்வாகத்தில் பல மாற்றங்களை செய்து வருகிறார். பயனாளர்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில், அவர்களுடைய பெயருக்கு அருகில், ப்ளூ டிக் குறியீடு வழங்கப்படுகிறது.
இதுவரை இலவசமாக வழங்கப்பட்ட இந்த சேவைக்கு, இனி மாதம் 8 டாலர் கட்டணம் வசூலிக்கப்படும் என, எலான் மஸ்க் சமீபத்தில் அறிவித்தார். இதற்கு பல்வேறு நாடுகளில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், மாதாந்திர கட்டணத்தை அமல்படுத்த உள்ளதாக மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, டுவிட்டரில் அரசியல், விளையாட்டு, சினிமா உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் கணக்கு வைத்துள்ளனர். அந்த பிரபலங்களின் பெயர்களில் டுவிட்டரில் பல்வேறு போலி கணக்குகளும் உள்ளன. இந்த போலி கணக்குகள் ஆள்மாறாட்டம் செயல்களில் ஈடுபட்டு டுவிட்டரின் நம்பகத்தன்மையை வலுவிழக்க வழிவகுக்கிறது.
அதேவேளை, இந்த போலி டுவிட்டர் கணக்குகளை கண்டுபிடித்து நீக்க டுவிட்டர் நிறுவனம் பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறது. அந்த வகையில், போலி கணக்குகள் கண்டறியப்பட்டாலும் அந்த கணக்குகளும் முதலில் எச்சரிக்கை விட்டு அதன் பின்னரே அந்த போலி கணக்கு நீக்கப்படுகிறது.
போலி கணக்குகளுக்கு தடை:
இந்நிலையில், எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: டுவிட்டர் பயனாளர்கள் போலி டுவிட்டர் கணக்களை உருவாகி ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டால் அந்த கணக்குகள் எந்த வித எச்சரிக்கையும் விடுக்கப்படாமல் நிரந்தரமாக நீக்கப்படும்.
கடந்த முறை கணக்கு நீக்கப்படுவதற்கு முன்பாக நாங்கள் எச்சரிக்கை அளித்துவந்தோம். ஆனால், தற்போது நாங்கள் அடையாள சரிபார்ப்பு நடைமுறையை விரிவுபடுத்திவிட்டதால் எச்சரிக்கைகள் எதுவும் அளிக்கப்படாது. இது டுவிட்டரின் ‘டுவிட்டர் புளூ’ வசதியை பெறுவதற்கான தெளிவான நிபந்தனையாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement