தமிழக இளம் சதுரங்க வீரர் பிரக்ஞானந்தா பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை

சென்னை: விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான அர்ஜூனா விருதுக்கு, இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டரான சதுரங்க வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தாவின் (Rameshbabu Praggnanandhaa) பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சேலம் மாரியப்பனுக்கு கடந்த 2017ம் ஆண்டு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.

சென்னைச்சேர்ந்த இளம் சதுரங்க வீரரான பிரக்ஞானந்தா, உலக செஸ் வீரரான கார்ல்சனை 3 முறை   தோற்கடித்து, சதுரங்க விளையாட்டில் சாதனை படைத்து வருகிறத. தற்போது 17 வயதாகும் பிரக்ஞானந்தா, கடந்த சில மாதங்களுக்கு சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெற்ற  44 வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியாவுக்காக ஓபன் பிரிவின் B அணியில் போட்டியிட்டு வெண்கலமும், தனி நபர் போட்டியில் வெண்கலமும் வென்றுள்ளார்.

இந்தியாவுக்காக புரிந்து வரும் தொடர் சாதனைகளை மையப்படுத்தி, அர்ஜூனா விருதிற்கு அவரது பெயரை, அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு பரிந்துரைத்து உள்ளது.

17 வயதான பிரக்ஞானந்தா, இந்திய சதுரங்க வீரர்களின் தர வரிசையில் 6 வது இடத்தில் இருந்து வருகிறார். எனவே, அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு, பிரக்ஞானந்தாவின் பெயரை, விளையாட்டு துறைக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான அர்ஜூனா விருதிற்கு பரிந்துரை செய்துள்ளது.

இந்தியாவில் இதுவரை விளையாட்டுத்துறையை சேர்ந்த  17 பேர் அர்ஜூனா விருது பெற்றுள்ளனர். அதில் 5 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். அதன்படி 1961 ஆம் ஆண்டு மேனுவல் ஆரோன், 1985 ஆம் ஆண்டு விஸ்வநாதன் ஆனந்த், 2000 ஆம் ஆண்டு சுப்பராமன் விஜயலக்ஷ்மி, 2002 ஆம் ஆண்டு கிருஷ்ணன் சசிகரன், 2017ம் ஆண்டு தங்கமகன் மாரியப்பன்  உள்ளிட்டோர் அர்ஜூனா விருது பெற்றுள்ளனர்.

அர்ஜுனா விருதுக்கு கோவாவை சேர்ந்த செஸ் வீராங்கனை பக்தி குல்கர்னியின் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.