நம் கண் பார்க்கும் விஷயங்களில் விவரங்கள் குவிந்திருக்காது. அது எளிதில் மறந்து போகும் ஆனால் சிசிடிவியின் கண்கள், பாரத்த அனைத்தையும் சேமித்து வைக்கும் அது அழிந்து போகாது. இந்த கருவை மையமாக கொண்டு நகை கடை கொள்ளையின் பின்னணியில் உருவாகியுள்ள திரைப்படம்தான் “ஆதாரம்”.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இயக்குநர் PS மித்ரன், ஒளிப்பதிவாளர் PG முத்தையா மற்றும் இயக்குநர் SR பிரபாகரன் வெளியிட்ட இப்படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் அதிகம் சொல்லப்படாத ஹெய்ஸ்ட் ஜானரில், காதல் கமர்ஷியல் அம்சங்கள் கலந்து, அனைவரையும் கவரும் வண்ணம் இப்படம் உருவாகியுள்ளது. மேலும் இயக்குநர் சீனு ராமசாமி அவர்கள் இந்த டீசரை பகிர்ந்து கவனம் ஈர்க்கும் டீசர் வாழ்த்துகள் என பாராட்டியுள்ளார்.
என் கவனம் ஈர்த்தது
#AADHARAM சிறு முன்னோட்டம்.
வாழ்த்துகள்.https://t.co/nxXbnuAZqp@matineefolks @pradeep_media @sia20152 @kavithadirect11@AjithVignesh9 @pooja_psh@dop_nSRK @Sree_vatshan @DoyceEditor @PeppyCinema @lightson_media @pro_barani @thiruupdates— Seenu Ramasamy (@seenuramasamy) November 6, 2022
இப்படத்தில் புதுமுக நடிகர் அஜித் விக்னேஷ் நாயகனாக நடிக்க, பூஜா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ராதாரவி, Y.G.மகேந்திரன், கதிரவன் பாலு, அட்ரஸ் கார்த்திக் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
MATINEE FOLKS நிறுவனம் சார்பில் G.பிரதீப்குமார், ஆப்ஷா மைதீன் தயாரித்துள்ள இப்படத்தை, அறிமுக இயக்குநர் கவிதா இயக்கியுள்ளார். வசனங்களை கவிதா மற்றும் ராசி தங்கதுரை இணைந்து எழுதியுள்ளனர். N.S.ராஜேஷ் குமார் & ஶ்ரீவட்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். டாய்ஸ்.M எடிட்டிங் பணிகள் செய்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் இறுதிகட்ட வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. படத்தின் ட்ரெய்லர், இசை வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.