அணு ஆயுதங்களை எல்லைக்குள் கொண்டு வர விரும்பவில்லை.
நோட்டோ விண்ணப்பம் நியாயமான காலத்திற்குள் முடிக்கப்படும்.
நோட்டோவில் இணைந்த பிறகும் பின்லாந்து அணு ஆயுதங்களை அதன் எல்லைக்குள் கொண்டு வர விரும்பவில்லை என அந்த நாட்டின் ஜனாதிபதி சவுலி நினிஸ்டோ திங்கள்கிழமை தெரிவித்தார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் நடவடிக்கைகளை தொடங்கிய பிறகு, ரஷ்யாவின் அண்டை நாடான பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் மேற்கத்திய ராணுவ கூட்டமைப்பான நோட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்தன.
இதனை மேற்கத்திய ராணுவ கூட்டமைப்பான நோட்டோவின் உறுப்பு நாடுகள் முழுமையாக ஆதரித்த நிலையில், நோட்டோவில் பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் இணையும் விண்ணப்பம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நோட்டோவில் இணைந்த பிறகும் தனது நாடு அணு ஆயுதங்களை அதன் எல்லைக்குள் கொண்டு வர விரும்பவில்லை என்று பின்லாந்து ஜனாதிபதி சவுலி நினிஸ்டோ திங்கள்கிழமை தெரிவித்தார்.
பின்லாந்தின் தேசிய பாதுகாப்பு பயிற்சி சங்கம் (MPK) நடத்திய நிகழ்வில் பேசிய ஜனாதிபதி சவுலி நினிஸ்டோ, மேற்கத்திய இராணுவக் கூட்டணியின் 30 உறுப்பினர்களில் 28 பேர் பின்லாந்தின் சேர்க்கையை ஆதரிப்பதாகவும், அதன் செயல்முறை நியாயமான காலத்திற்குள் முடிக்கப்படும் என்றும் கூறினார்.
கூடுதல் செய்திகளுக்கு; நடிகை சமந்தா வெளியிட்ட சமீபத்திய புகைப்படங்கள்: கண் கலங்கிப் போன ரசிகர்கள்
பின்லாந்தின் பொது ஒளிபரப்பு நிறுவனமான Yle கருத்துப்படி, கிழக்கு ஐரோப்பாவில் பதற்றத்தை நிறுத்துவதற்கு ரஷ்யாவுடன் ஒரு உரையாடலைப் பராமரிப்பது “தகுதியான குறிக்கோள்” என்று நினிஸ்டோ குறிப்பிட்டார்.
மேலும் பின்லாந்துக்கு அணு ஆயுதம் வழங்கப்படுவதற்கு அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.