யாழின் முக்கிய இடங்களில் திடீர் இராணுவ சோதனைகள் சாவடிகளில்! அச்சத்தில் மக்கள்


யாழின் முக்கியமான இடங்களில் இராணுவ சோதனை சாவடிகள்

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முயற்சியாக இன்றிலிருந்து முக்கியமான இடங்களில் இராணுவ சோதனை சாவடிகள் அமைத்து வீதியால் பயணிப்போரை சோதனையிட உள்ளதாக யாழ்ப்பாண ராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து இந்த போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் பொதுவெளியில் அதிகளவாக பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

மேற்படி விடயம் தொடர்பில் அண்மையில் விஜயம் மேற்கொண்ட நீதி அமைச்சர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநரால் போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முகமாக யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இடம்பெற்றிருந்தது.

யாழின் முக்கிய இடங்களில் திடீர் இராணுவ சோதனைகள் சாவடிகளில்! அச்சத்தில் மக்கள் | Sudden Military Raids On Booths

வடக்கு மாகாண ஆளுநரின் பரிந்துரைக்கு அமைய சோதனைச் சாவடி

வடக்கு மாகாண ஆளுநரின் பரிந்துரைக்கு அமைய இன்று முதல் யாழ்ப்பாணத்தின் முக்கியமான இடங்களில் இராணுவத்தினரால் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு போதை பொருள் விநியோகம் மற்றும் போதை பொருள் பாவிப்போர் கைது செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் போதை பொருள் விற்பனை செய்வோர் மற்றும் போதை பொருள் பாவிப் போர் தொடர்பில் ஏதாவது தகவல்கள் தெரிந்தால் பொதுமக்கள் அருகில் உள்ள ராணுவ முகாமில் தகவல்களை தெரிவிக்கும் இடத்தில் குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய உதவியாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழின் முக்கிய இடங்களில் திடீர் இராணுவ சோதனைகள் சாவடிகளில்! அச்சத்தில் மக்கள் | Sudden Military Raids On Booths

யாழ்ப்பாணத்தில் போதை பொருளை கட்டுப்படுத்த மக்களின் உதவி

எனினும் இன்றிலிருந்து யாழ்ப்பாணத்தில் போதை பொருளை கட்டுப்படுத்தும் முகமாக இராணுவத்தினரால் யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடும் இராணுவம் பொதுமக்கள் இந்த விடயத்திற்கு தமக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

எதிர்கால சந்ததியினரை போதைக்கு அடிமையாக்குவதற்கு நாங்கள் இடமளிக்காது போதைப்புக்கு அடிமையானவர்களை இனம் கண்டு அவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவே இன் நடவடிக்கை றே்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழின் முக்கிய இடங்களில் திடீர் இராணுவ சோதனைகள் சாவடிகளில்! அச்சத்தில் மக்கள் | Sudden Military Raids On Booths

போதை பொருள் பாவனையினை குறைப்பதற்கு ஒத்துழைப்பு

இவ்வாறான காரணங்களால் சோதனை சாவடிகள் அமைக்கப்படுகின்றன எனவே பொதுமக்கள் யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பாவனையினை குறைப்பதற்கு எமக்கு முழு ஒத்துழைப்பினையும் வழங்க வேண்டும் என இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.

இராணுவத்தின் இவ்வாறான சோதனைச்சாவடி அமைக்கும் திடீர் நடவடிக்கை மக்கள் மத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.