வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன் : ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தை தொடர்ந்து, ‘பேஸ்புக்’கின் தாய் நிறுவனமான, ‘மெட்டா’விலும் ஆட் குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவை தலைமையகமாக வைத்து செயல்படும், ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தை, அந்நாட்டு தொழிலதிபர் எலான் மஸ்க் சமீபத்தில் கையகப்படுத்தினார். இதையடுத்து அதிரடியாக ஆட் குறைப்பு நடவடிக்கையில் அவர் ஈடுபட்டார்.
உலகம் முழுதும் அந்நிறுவனத்துக்காக பணியாற்றும் 7,500 ஊழியர்களில் 50 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்து சமீபத்தில் உத்தரவிட்டார்.
டுவிட்டர் நிறுவனத்துக்கு நாள் ஒன்றுக்கு 32 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதால் இந்த முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக எலான் மஸ்க் தெரிவித்தார்.
இந்நிலையில்டுவிட்டர் பாணியை பின்பற்றி, பேஸ்புக் சமூகவலைதளத்தின் தாய் நிறுவனமான, ‘மெட்டா’விலும் ஆட்குறைப்பு செய்ய அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் முடிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.இந்த வாரமே துவங்கப்பட உள்ள ஆட்குறைப்பு நடவடிக்கையால், ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மெட்டாவர்ஸ் நிறுவனத்தின் புதிய முயற்சிகள் லாபம் ஈட்ட குறைந்தது, 10 ஆண்டுகளாகவது ஆகும். அதற்கு பெரும் அளவில் முதலீடுகள் செய்யப்பட்டு இருப்பதால், புதிதாக ஆட்களை பணிக்கு சேர்ப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக, மார்க் சமீபத்தில் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement