வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : ‘பயனாளர்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும், ‘ப்ளூ டிக்’ சேவைக்கான மாதாந்திர கட்டண முறை இந்தியாவில் இந்த மாதத்தில் அறிமுகமாகும்’ என, ‘டுவிட்டர்’ சமூக வலைதள உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார்.
அமெரிக்காவை தலைமை யிடமாக வைத்து செயல்படும் டுவிட்டர் சமூக வலை தளத்தை, மிகப் பெரும் பணக்கார தொழிலதிபர் எலான் மஸ்க் சமீபத்தில் வாங்கினார்.
இதைத் தொடர்ந்து, அவர் அதன் சேவை மற்றும் நிர்வாகத்தில் பல மாற்றங்களை செய்து வருகிறார். பயனாளர்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில், அவர்களுடைய பெயருக்கு அருகில், ப்ளூ டிக் குறியீடு வழங்கப்படுகிறது.
இதுவரை இலவசமாக வழங்கப்பட்ட இந்த சேவைக்கு, இனி மாதம் 8 டாலர் கட்டணம் வசூலிக்கப்படும் என, எலான் மஸ்க் சமீபத்தில் அறிவித்தார்.
இதற்கு பல்வேறு நாடுகளில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், மாதாந்திர கட்டணத்தை அமல்படுத்த உள்ளதாக மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கட்டண முறை இந்தியாவில் எப்போது அறிமுகமாகம் என, டுவிட்டர் தளத்தில் இந்தியர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு எலான் மஸ்க் கூறியுள்ளதாவது:
இந்தியாவில், இந்த மாதத்துக்குள் இந்த கட்டண முறை அறிமுகமாகும். இதற்கான கட்டணம் எவ்வளவு என்பது விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement