ட்விட்டரை நிறுவனத்தை தொடர்ந்து பெருமளவு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய மெட்டா திட்டம்..?

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பவராகவும் இருப்பவர் எலான் மஸ்க். இந்த நிலையில், பிரபல சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை கடந்த வாரம் எலான் மஸ்க் தன் வசப்படுத்தினார்.

இதனையடுத்து, ட்விட்டரில் அதிரடி மாற்றங்கள் நடந்து வரும் நிலையில் உலகம் முழுவதும் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 7,500 ஊழியர்களில் 50 சதவிகித ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி கடந்த 5-ம் தேதி ட்விட்டர் நிறுவனம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டது. இதனால், ட்விட்டர் ஊழியர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், ட்விட்டரை தொடர்ந்து ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவும் ஊழியர்கள் குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கள் ஊழியர்களின் பெரும்பாலானோரை இந்த வாரத்தில் பணி நீக்கம் செய்ய மெட்டா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மெட்டா நிறுவன ஊழியர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ட்விட்டர் நிறுவனம் தங்கள் ஊழியர்களை சமீபத்தில் பணி நீக்கம் செய்த நிலையில் உலகின் மிகப்பெரிய மற்றொரு சமூகவலைதள நிறுவனமான ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனம் மெட்டாவும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.