உயர்ந்த வெப்பநிலையானது ஐரோப்பா கண்டம் எதிர்கொண்ட மிக மோசமான வறட்சிக்கு வழிவகுத்தது.
2022ல் கடுமையான அனற்காற்று காரணமாக 15,000 பேர்கள் மரணமடைந்துள்ளனர்.
தீவிர வெப்ப அலை காரணமாக 2022ல் இதுவரை ஐரோப்பாவில் 15,000 பேர் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான தகவலை உலக சுகாதார அமைப்பு திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது. இதில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஸ்பெயின் மற்றும் ஜேர்மனி முதலிடங்களில் உள்ளது.
ஜூன்-ஆகஸ்ட் வரையிலான மூன்று மாதங்கள், ஐரோப்பாவில் மிகவும் வெப்பமானதாக காணப்பட்டுள்ளது,
மேலும் விதிவிலக்காக உயர்ந்த வெப்பநிலையானது ஐரோப்பா கண்டம் எதிர்கொண்ட மிக மோசமான வறட்சிக்கு வழிவகுத்தது.
Photo: Ooi Boon Keong
இதுவரை வெளியான தரவுகளின் அடிப்படையில், 2022ல் கடுமையான அனற்காற்று காரணமாக 15,000 பேர்கள் மரணமடைந்துள்ளனர்.
கிட்டத்தட்ட 4,000 பேர்கள் ஸ்பெயின் நாட்டிலும்,
1,000 பேர்கள் போர்த்துகல் நாட்டிலும், 3,200 பேர் பிரித்தானியாவிலும், சுமார் 4,500 பேர்கள் ஜேர்மனியிலும் வெப்ப அலை காரணமாக மூன்று மாதங்களில் மரணமடைந்துள்ளனர்.
மட்டுமின்றி, பல நாடுகள் தங்கள் தரவுகளை இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்றும், மரண எண்ணிக்கை அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
பிரித்தானியாவில் முதன்முறையாக ஜூன்,ஜூலை மாதங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
வெப்ப அழுத்தம், உடல் தன்னைத் தானே குளிர்விக்க முடியாத நிலை, ஐரோப்பிய பிராந்தியத்தில் வெப்ப அலை தொடர்பான மரணங்களுக்கு முக்கிய காரணமாக மாறியுள்ளது.
மேலும், நாள்பட்ட இதய நோய், சுவாச பிரச்சனைகள் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கும் தீவிர வெப்ப அலை ஆபத்தை விளைவிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.