Amazon Prime குறைந்த விலை திட்டம்! இந்தியா நியூஸிலாந்து கிரிக்கெட் போட்டிகளை இனி காணலாம்!

ஸ்மார்ட்போன்களில் தினமும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் போன்றவற்றை பார்த்து ரசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி.

மொபைல் போன்களில் மட்டுமே கிடைக்கும் குறைந்த விலை திட்டம் ஒன்றை அமேசான் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த Mobile Edition Plan ஒரு வருடத்திற்கு 599 ரூபாய் விலையில் கிடைக்கிறது. இந்த திட்டத்தை Amazon நிறுவனமும் Airtel நிறுவனமும் இணைந்து அறிமுகம் செய்துள்ளது.

இந்த வசதியில் ஒருவர் ஒரு ஸ்மார்ட்போனில் மட்டுமே பார்க்கமுடியும். இந்த திட்டத்தில் அனைத்து திரைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் Standard Definition (SD) முறையில் காணமுடியும்.

Netflix App விலை குறைந்த சந்தா திட்டம்! Disney மற்றும் Amazon போலவே!

இந்த மொபைல் பிளான் மற்ற திட்டங்களை போல 4K Resolution முறையில் காணமுடியாது. அந்த வசதியை நாம் பெறவேண்டும் என்றால் நாம் சராசரி Prime Subscription பெறவேண்டும். இந்த திட்டத்தை அவர்கள் AMazon Prime சென்று பெறலாம். இந்த திட்டம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் முழு Amazon Prime திட்டமான 1499 ரூபாய் முழு திட்டம் பெறலாம். இதில் கூடுதலாக நமக்கு Amazon Prime Music மாற்று Amazon App மூலம் வேகமான டெலிவரி கிடைக்கும்.

இந்த திட்டம் இதற்கு முன்னாள் Airtel வாடிகையாளர்களுக்கு மட்டும் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த திட்டம் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Amazon India வழங்கும் புதிய Spotify Premium Subscription! எப்படி இந்த சலுகையை பெறுவது!

இந்த திட்டம் 89 ரூபாய்க்கு 6GB மொத்த டேட்டா வசதியுடன் 28 நாட்களுக்கு ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். இன்னொரு திட்டமாக 299 ரூபாய் திட்டம் உள்ளது. இதில் Amazon Prime Mobile Edition திட்டம் 1.5GB தினசரி டேட்டா 28 நாட்களுக்கு கிடைக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.