ஒடிசா: கார்த்திகை பவுர்ணமியை ஒட்டி ஒடிசா மாநிலத்தில் படகு திருவிழா கோலகலமாக கொண்டாடபடுகிறது. ஒடிசா மாநிலத்தில் கார்த்திகை பவுர்ணமி தினத்தில் கடல் தெய்வத்திற்கு பூஜைகள் நடத்தப்படுவது வாடிக்கையாகும். இதனையொட்டி ஒய்டா பந்தனா எனப்படும் படகு திருவிழா அதிகாலை முதலே கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
வாழை மட்டை, தெர்மா கோல்கள் மற்றும் இதர மிதக்கும் பொருட்களை கொண்டு செய்யப்பட்ட சிறிய படகுகளில் தீபங்களை ஏற்றிய மக்கள் அதனை நீர்நிலைகளில் மிதக்க விட்டு வழிப்பட்டனர். புவனேஷ்வரில் நடைபெற்ற படகு திருவிழா கொண்டாட்டத்தில் நுற்றுக்கணக்கான விளக்குகளால் ஏற்றப்பட்டதால் அப்பகுதி முழுவதையும் ஒளி வெள்ளம் சூழ்ந்தது.
சிறிய படகுகளில் தீபம் ஏற்றி அதனை நீர்நிலைகளில் மிதக்கவிட்டு வழிப்பட்டால் ஆண்டு முழுவதும் இல்லத்தில் நன்மைகள் தொடரும் என்பது ஒடிசா மாநில மக்களின் நம்பிக்கை ஆகும். இதைப்போல வட மாநிலங்கள் முழுவதும் கார்த்திகை பவுர்ணமியை ஒட்டி நீர்நிலைகளில் புனித நீராடி மக்கள் கோவில்களில் வழிப்பாடு செய்து வருகின்றனர்.