மாணவியை திருமணம் செய்துகொள்ள ஆணாக மாறிய ஆசிரியை!

காதலுக்கு பாலின பேதங்கள் கிடையாது என்பது இந்த 21ஆம் நூற்றாண்டிலும் பல்வேறு தரப்பினருக்கு சிக்கலுக்குரியதாக இருந்து வருகிறது. ஆண் – பெண் காதலை எதிர்ப்பதை போல அல்லாமல், தன்பால் ஈர்ப்பாளர்களின் காதல்களை ஒரு பொதுச்சமூகம் மிகக் கொடூரமான கண்ணோட்டத்தில்தான் கையாள்கிறது. https://zeenews.india.com/tamil/topics/rajasthan

அந்த வகையில், ராஜஸ்தானில பெண் ஒருவர், பல ஆண்டுகளாக காதலித்து வந்த மற்றொரு பெண் திருமணம் செய்வதற்காக பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

ராஜஸ்தானில் ஆசிரியராக பணிபுரியும் மீரா என்பவர்தான், பாலின மாற்று அறுவை சிகிச்சை அவரது மாணவி கல்பனாவை தற்போது திருமணம் செய்துள்ளனர்.  இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்டு திருமணம் செய்துகொள்ளும் இந்த முறை வழக்கத்திற்கு மாறாக இருந்தாலும், இதற்கு அவர்களின் பெற்றோர் முழு ஒத்துழைப்பு உடன் நடந்துள்ளது. மீரா தனது பெயரை பின்பு, ஆரவ் குந்தல் என மாற்றியுள்ளார். 

அரசு பள்ளி ஒன்றி, கபடி கற்றுக்கொடுக்கும் ஆசிரியரான ஆரவ் (மீரா), கல்பனா பல ஆண்டுகளாக கபடி பயின்று வந்தததாக கூறப்படுகிறது. 2016ஆம் ஆண்டில் இருந்து  ஆரவுக்கும் (மீராவுக்கும்), கல்பனாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, முதலிரண்டு வருடங்கள் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். 

2018ஆம் ஆண்டில், ஆசிரியர் ஆரவ் (மீரா) கல்பனாவிடம் தனது காதலை கூறியுள்ளார், கல்பனாவும் உடனே சம்மதமும் தெரிவித்துள்ளார். ஆனால், இவர்கள் திருமணம் செய்ய ஒரே ஒரு சிக்கல்தான் இருந்தது. அதாவது, இரண்டு பெண்கள் திருமணம் செய்துகொள்ள அவர்கள் இருவரின் பெற்றோரும் ஒத்துக்கொள்ளவில்லை. அதனால், ஆரவ் (மீரா) பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு, ஆணாக மாறி திருமணம் செய்துகொள்ளலாம் என திட்டமிட்டுள்ளனர். 

இதுகுறித்து, ஆராவ் (மீரா) அளித்த பேட்டி ஒன்றில், தான் சிறு வயதில் இருந்தே தன்னை ஓர் ஆணாகவே உணர்ந்ததாக கூறியுள்ளார். அதனால், இந்த அறுவை சிகிச்சை செய்யும் முடிவு இயல்பானதாகவே அமைந்தது. 2019ஆம் ஆண்டு, தொடர் அறுவை சிகிச்சையை தொடங்கிய ஆராவ் (மீரா), 2021ஆம் ஆண்டு அவரது கடைசி அறுவை சிகிச்சையும் செய்துகொண்டு தற்போது நலமுடனும், மகிழ்ச்சியுடனும் இருப்பதாக தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.