அடிலெய்ட் ,
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இதில் சிட்னியில் நாளை (புதன்கிழமை) நடக்கும் முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. மற்றொரு அரைஇறுதியில் இந்திய அணி, இங்கிலாந்தை நாளை மறுதினம் அடிலெய்டில் எதிர்கொள்கிறது.
அரையிறுதி போட்டிக்கு தயாராவதற்கு இந்திய அணி வீரர்கள் அடிலெய்டில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் பயிற்சியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து சிறிது நேரம் ஓய்வில் இருந்த ரோகித் சர்மா பின்னர் தனது பயிற்சியை தொடங்கினார்.இதனால் அவருக்கு ஏற்பட்ட காயம் அரையிறுதி போட்டியில் விளையாட பாதிப்பை ஏற்படுத்தாது என கூறப்படுகிறது.