டோனட்ஸ்க் பகுதியில் போர் உக்கிரமடைந்துள்ளதாக, உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார்.
நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், தினமும் நூற்றுக்கணக்கான ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டு, உக்ரைன் படைகள் முன்னேறி செல்வதாக தெரிவித்தார்.
50க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் நிகழ்த்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.