பாஜக மூத்த தலைவர் அத்வானியின் 95-வது பிறந்த நாள் இன்று. இதைமுன்னிட்டு அத்வானி வீட்டுக்கு நேரில் சென்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் 95-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அத்வானியின் வீட்டுக்கு நேரில் சென்று பொன்னாடை போர்த்தி வாழ்த்து கூறினார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மதிப்பிற்குரிய அத்வானியின் இல்லத்திற்கு சென்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டேன். அவரது உடல்நலம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, அத்வானியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது வீட்டுக்கு நேரில் சென்ற பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்துக் கொண்டார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ரஷ்ய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரும் அத்வானிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.