பெங்களூரு: இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டம் குறித்து மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பாலியல் வழக்குகள் அதிகரிப்பதால், 9ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு கற்பிக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. சிறுமியை காதலித்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக சிறுவன் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. காதல் என்ற பெயரில் தொடங்கி பாலியல் வன்கொடுமை என்ற குற்றச்சாட்டு வரை செல்லும் வழக்குகள் அதிகரித்து வருகின்றன என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.