போபால்,
மத்தியபிரதேச மாநில பாஜக மந்திரி ஜனார்தன் மிஸ்ரா. இவர் அம்மாநிலத்தின் ரீவா நகரில் நீர் பாதுகாப்பு தொடர்பாக நேற்று நடந்த கருத்தரங்கில் பங்கேற்றார். கருத்தரங்கில் மந்திரி ஜனார்தன் பேசியதாவது,
நிலத்தில் நீர் இல்லாமல் வறண்டு வருகிறது. நீர் சேமிக்கப்படவேண்டும்… மது குடியிங்கள், புகையிலை சாப்பிடுங்கள், கஞ்சா குடியுங்கள், தின்னர், ‘சொலுயூஷன்’ வாசனையை நுகருங்கள், ‘அயோடெக்ஸ்’ சாப்பிடுங்கள்… ஆனால் நீரின் முக்கியத்துவத்தை உணருங்கள். பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டு வருகிறது. போர்வல் மற்றும் டியூப்வல் மூலம் தண்ணீரை எடுத்து நிலத்தடி நீரை மக்கள் காலி செய்கின்றனர். உங்கள் பணத்தை எப்படி வேண்டுமானாலும் வீணடியுங்கள் ஆனால் நீர் பாதுகாப்பில் முதலீடு செய்வது முக்கியமானது’ என்றார்.