விஜய்யின் 66வது படமாக உருவாகி வரும் வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிளான ரஞ்சிதமே பாடல் கடந்த நவம்பர் 5ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பட்டையக்கிளப்பும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
வம்சி இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா, யோகிபாபு, சரத்குமார், குஷ்பு என பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த படம் 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது.
தமன் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது. பாடலாசிரியர் விவேக் வரிகளில் ரஞ்சிதமே பாடலை விஜய்யும், மானசியும் பாடியிருக்கிறார்கள்.
பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் கூடவே விமர்சனங்கள் எழ தவறவில்லை. அதன்படி, 1994ல் வெளியான உளவாளி படத்தில் இடம்பெற்ற ‘மொச்ச கொட்ட பல்லழகி’ என்ற பாடலை போன்றே ரஞ்சிதமே பாடலின் மெட்டு இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பதிவுகள் பறந்து வருகின்றன.
இருப்பினும் ரஞ்சிதமே பாடலை 2 கோடிக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டிருக்கிறது. பாடலின் கடைசியில் வரும் இசைக்கு விஜய் எப்படி நடனமாடியிருப்பார் என்றும் ரசிகர்கள் வெகு ஆர்வமாக பார்க்க காத்திருக்கிறார்.
#Ranjithamey full Video Ippo dhannn Paathennn. theatre la Seat laaa yaaruu maee okkaramatttinggaaa DOT ungalloodaaa nannummmm orruuu rasigaaanna #Anna @actorvijay
Pinniiiii peddalllllll
— thaman S (@MusicThaman) November 8, 2022
இந்த நிலையில், வாரிசு படத்தின் இசையமைப்பாளர் தமன், ரஞ்சிதமே பாட்டின் வீடியோவை முழுவதுமாக பார்த்துவிட்டதாக ட்விட்டரில் பதிவிட்டிருப்பது விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. அதன்படி, “ரஞ்சிதமே பாட்டின் முழு வீடியோவை பார்த்தேன். தியேட்டர்ல சீட்ல யாருமே உட்காரமாட்டிங்க.. டாட்.. உங்களோட நானும் ஒரு ரசிகனா காத்திருக்கேன். பின்னி பெடல்” என ஃபயர் விட்டு ட்வீட்டியிருக்கிறார் தமன்.
இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.