கடந்த 2020 மார்ச் மாதத்திற்கு பிறகு தினசரி கொரோனா உயிரிழப்பு ‘பூஜ்யம்’ நிலையை இன்று அடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று கடந்த 2 வருடங்களுக்கு மேலாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்த நிலையில் இந்தியாவிலும் கோடிக்காணக்கானோர் பாதிக்கப்பட்டும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தும் வந்தனர். தினசரி பாதிப்பு, உயிரிழப்பு தொடர்பான விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு வரும் நிலையில், இன்று வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின் படி கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 625 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 2020 ஏப்ரல் 9ம் தேதிக்கு பிறகு தினசரி பாதிப்பு குறைந்துள்ளதாகவும், உயிரிழப்பை பொருத்தவரை 2020 மார்ச் மாதத்திற்கு பிறகு தினசரி உயிரிழப்பு “பூஜ்ய” நிலையை இன்று அடைந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
இதையும் படிக்கலாமே: என்னது! குறட்டைவிட்டால் கண்பார்வை பறிபோகிறதா? – அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM