ஜேர்மன் நகரமொன்றில் வீடு ஒன்றிற்குள் சிறுமி ஒருத்தி அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த சிறுமியின் தாயே அவளை பல வருடங்களாக ஒரு அறைக்குள் அடைத்துவைத்துள்ளார்.
ஜேர்மன் நகரமான Attendornஇல், வீடு ஒன்றில் சிறுமி ஒருத்தி அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதைத் தொடர்ந்து பெரும் முயற்சிக்குப் பின் அந்த வீட்டுக்குள் நுழைந்துள்ளார்கள் பொலிசார்.
அப்போது, அந்த வீட்டில் ஒரு அறையில் எட்டு வயது சிறுமி ஒருத்தி அடைத்துவைக்கப்பட்டுள்ளதை அவர்கள் கண்டுள்ளார்கள்.
AFP: Markus Klümper/dpa
விசாரணையில், ஒன்றரை வயதிலிருந்தே அந்த சிறுமி அந்த அறைக்குள் அடைத்துவைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. அந்த சிறுமியின் தந்தையும் தாயும் பிரிந்த நிலையில், அந்த சிறுமியின் தாய் தான் இத்தாலிக்குச் செல்வதாக சிறுமியின் தந்தையிடம் கூறியிருக்கிறார். ஆனால் உண்மையில் அவர் இத்தாலிக்குச் செல்லவில்லை.
அதே நகரிலேயே இருக்கும் தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்று அங்கேயே தனது மகளை பல ஆண்டுகளாக அடைத்துவைத்துள்ளார் அந்தப் பெண்.
எதற்காக அவர் அப்படிச் செய்தார் என்ற விவரம் வெளியாகவில்லை.
பல ஆண்டுகளாக வெளி உலகத்தையே பார்க்காத அந்த சிறுமி, தற்போது அரசின் பொறுப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளாள்.
பல ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியே வராததால், அவள் அவளால் சரியாக நடக்கவோ படி ஏறவோ இயலவில்லை.
அந்த சிறுமியின் தாய் மற்றும் பாட்டி தாத்தாவிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.