இந்தியா உட்பட உலகின் சில நாடுகளில் இன்று முழு சந்திர கிரகணம் தெரிகின்ற சூழலில், இந்த நிகழ்வை நேரலையில் லைவ் ஸ்ட்ரீம் செய்து வருகிறது டைம் அண்ட் டேட் தளம். சுமார் ஆறு மணி நேரம் இந்த நிகழ்வை ஸ்மார்ட்போன் போன்ற கேட்ஜட்களை கொண்டுள்ள பயனர்களால் பார்க்க முடியும்.
ஆசியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, கிழக்கு மற்றும் வடக்கு ஐரோப்பாவின் சில பகுதிகள், தென் அமெரிக்காவிலும் இந்த சந்திர கிரகணத்தை மக்களால் வெறும் கண்ணில் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் உலகின் மற்ற பகுதிகளில் வாழும் மக்களுக்காகவும், மோசமான வானிலை காரணமாக அதை மிஸ் செய்யும் மக்களுக்கு உதவும் நோக்கில் நேரலையில் முழு சந்திர கிரகண நிகழ்வு ஸ்ட்ரீம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தப் பணிக்கு பின்னால் நிறைய பேரின் உழைப்பு அடங்கியுள்ளது. பவுர்ணமி நாளில் சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இது நடப்பு ஆண்டில் இரண்டாவது சந்திர கிரகண நிகழ்வு ஆகும்.
இதோடு முழு சந்திர கிரகண நிகழ்வு வரும் 2025 வாக்கில் நிகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திர கிரகணம் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2.39 மணிக்கு தொடங்கி, மாலை 6.19 மணிக்கு முடிவடையும். இதில் முழு சந்திர கிரகணம் மாலை 3.46 மணி முதல் 5.11 வரை தென்படும். சென்னையில் மாலை 5.38 மணிக்குதான் சந்திரன் உதயமாகும். எனவே, முழு கிரகணத்தை காண இயலாது. வீடியோ லிங்க்..